Terms and Conditions

Terms and Conditions


உறுப்பினர்களைச் சேர்த்தல்

1. தகுதி

               இச்சங்கத்தின் நோக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நன்மைக்கும் பாடுபடும் எண்ணம் கொண்ட விருப்பமுடைய தொண்டைமண்டல வேளாளர் சமூகத்தினர் அனைவரும்  உறுப்பினராக சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் சங்க அலுவலக வேலை நேரத்தில் இதற்கான உள்ள மனுவினை பூர்த்தி செய்து கொடுத்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.  உறுப்பினர் சேர்க்கைக்கு இணையதள வழி மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து     மற்றும் சங்கத்தின் வங்கி கணக்கில் இணையதளம் மூலமாக பணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

 உறுப்பினராக சேர்ந்து கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ நிர்வாக குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. இது விஷயத்தில் அதனுடைய முடிவே இறுதியானதாகும். மனுவை பெற்று மூன்று மாத காலத்திற்குள் நிர்வாக குழு தன் முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். 

2. சந்தா மற்றும் நீக்கும் முறை

              உறுப்பினர்கள் இருவகை உண்டு 

           1. ஆயுட்கால உறுப்பினர்

           2.  சாதாரண உறுப்பினர்

ஒவ்வொரு ஆயுட்கால உறுப்பினரும் தனது சேர்க்கையின் பொழுது ஆயுட்கால சந்தாவாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். ஆயுட்கால சந்தா என்பது 15 ஆண்டுகாலம் ஆகும் பிறகு அவர்கள் மீண்டும் அன்று நடைமுறையிலுள்ள ஆயுட்கால உறுப்பினர் சந்தா தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் வேண்டும்.

சாதாரண சந்தாதாரர்கள் ஆண்டுக்கு ரூபாய் 250 செலுத்திட வேண்டும். சந்தா செலுத்துபவர்கள் பொருளாளர் வசம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டு சந்தா  செலுத்துபவர்கள் பிரதி வருடம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பொருளாளர் வசம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். நுழைவு கட்டணம் கிடையாது சாதாரண உறுப்பினர்கள் நிர்வாக குழுவில் தேர்வு பெற தகுதி இல்லை, ஆயுட்கால உறுப்பினர்கள் நிர்வாக குழுவில் தேர்வு செய்ய தகுதி  உடையோர் ஆவர்.

3. நீக்கம் குறித்து

                அனைத்து சாதாரண உறுப்பினர்களும் சந்தா தொகையை பிரதி வருடம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் பிரதி வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தப்படவில்லை என்றால் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவார்கள் நீக்கப்பட்டவர்கள் மீளவும் சேர விரும்பினால் நிர்வாக குழுவின் பரிந்துரையின் பேரில் அபராதம் ரூபாய் 50 மற்றும் நிலுவைத் தொகையையும் செலுத்தினால் மீண்டும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.