About

Thondai Mandala Vellala Sangam

 

Formation 

In 1880, Our Ancestors started an association at Tirutani, Nine members of our community people joined together to form this association in that place which was headed by Late. Vedhagiri Mudliyar son of Annamalai Mudliyar, Kanchipuram.

In 1900, Late P.A. Ramalinga Mudaliyar ensure the boundaries of the land and caretaker of the property and followed by this, Late P.V. Natesa Mudaliyar, Pillanthangal, established a charity Mutt in Tirutani, built a Community Marriage Hall and performed Girhapravesam on 13.06.1966.

On 20.04.2001 Headed by Thiru P.A.R. Eswara Vadivel Mudaliyar, Mara thotti registered the sangam in the name of Thondai Mandala Vellala Sangam vide Reg.No 70/2001 and renewed till date.

The Following Activities Performed by this association

1. The association is primarily aimed to do Community Welfare Service to Thondai mandala velalar.  

2. TMVS will strive to achieve self-sufficiency in education, economy and social development of the Community.

3. TMVS will engage itself in the effort to protect the interests of women, children and the elderly.

4. The association will work hard to establish the best schools, colleges in the Thondai mandala region.

5. The association will work for the development of education in the region, prizes will be given annually to the top student in the Tenth (10) and Twelfth (12) standard.

6. The association will engage itself in community service. It will make its service available to the people by setting up passenger canopies, water tanks and setting up free medical camps at key locations.

7. The association will provide accommodation and assistance for weddings to take place in the native-owned inn.

8. This association will help the physically challenged to achieve improvement in the community by striving to alleviate the suffering of the poor and simple people.

9. The association will buy immovable property from its funds in the name of the association and set up a hospital, library and old age home in it to do better charity for the society.

10. The association strives for literacy, brotherhood, religious harmony and national unity in the community.

11. This association will not contradict the policy of the government and will strive to make its service available to the people.

12. Periya Kanchipuram Arulmigu Elavarkuzhali Udanurai Ekambaranathar Temple Malaichandi Sayaratsai Puja at 6 pm Performing daily puja 365 days.

13. Arranging Annadhanam on the occasion of Chinna Kanchipuram Sri Varadaraja Swami Rathodsavam.

14. Conducting General Assembly for every year at Thirutani.


தொண்டைமண்டல வேளாளர்

தொண்டை மண்டலம்

தொண்டை நாடு (Thondai Nadu) அல்லது தொண்டை மண்டலம் (Thondaimandalam) என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு 'திரையன்' என்னும் மன்னனும், தொண்டை நாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 'இளந்திரையன்' என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும், வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொண்டைமான் இளந்திரையன் என்ற சோழ அரசன் இந்நாட்டின் சங்ககால அரசன். “தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்கிறார் 12ஆம் நூற்றாண்டு ஔவையார். இந்த நிலை சங்ககாலத்திலும் இருந்திருக்க வேண்டும்.

தொண்டைநாட்டு மக்கள் தொண்டையர் எனப்பட்டனர். தொண்டு புரிவோர் தொண்டையர் என்றும், தொண்டு புரிவோர் சான்றோர் என்றும், தொண்டைநாடு என்னும் பெயர் இந்த வகையில் தோன்றியிருக்கலாம்.

பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு, அதற்கு ஜயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது. தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது.

 

சங்ககால சான்றுகள்

வழைமரம்

தொண்டைநாட்டு மலையடுக்கங்களில் வழைமரம் அதிகம். (வெண்ணிறத்தில் பூக்கும் புன்னை மரத்தை வழை என்பர்) [1]

வேங்கடத்தில்

வேங்கடமலைப் பகுதியிலும் தொண்டையர் ஆட்சி நடைபெற்றது. [2]

கொண்டி உண்டி

தொண்டைமான் இளந்திரையனின் முன்னோர் போரிட்டுப் பெற்ற செலவத்தால் உண்டு வாழ்ந்தனராம். [3]

Reference:

[1]வண்தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கம் - குறுந்தொகை 260

[2] தொண்டையர் --- வேங்கடம் - அகம் 213

[3]கொண்டி உண்டித் தொண்டையோர் மருக - பெரும்பாணாற்றுப்படை 454

 

தொண்டை மண்டலம் எல்லைகள்

தொண்டை மண்டலம் என்ற தொண்டைநாடு, தமிழ்நாட்டின் வடக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்று பகுதி ஆகும். இப்பகுதியிலுள்ள மாவட்டங்கள் பாரம்பரிய பல்லவ இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். தொண்டை மண்டலத்தின் எல்லைகள் தெளிவற்றது – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப்பகுதி, மிகப்பெரிய தொண்டை மண்டலம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியது மற்றும் தொண்டை மண்டலத்தை விரிவுபடுத்தினால், ஆந்திராவிலுள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் பகுதிகளும் இணையும்.

தெற்கில் புதுச்சேரி முதல் வடக்கில் ஆந்திர மாநிலம் சித்தூர், குண்டூர் வரையில் பரவிக் கிடந்த பண்டைய நாடு தொண்டைநாடு. வேறு வகையில் சொன்னால் தென்பெண்ணை ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்டுக் கிடந்த நிலப்பகுதி எனலாம்.

வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணைஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள் ஆகும்.

 

 

 

தொண்டைமண்டல வேளாளர்

 

இந்த நாட்டிற்குத் தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு என்னும் பெயர் எப்படி வந்தது? இதைப் பற்றி அறிஞர் பல விதமாகக் கூறுகின்றனர்.

 

1. இந்த நாட்டில் முதலில் இருந்தவர் குறும்பர் என்பவர். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வந்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக (மாவட்டங்களாக)ப் பிரித்துக் கொண்டு சுகமாக இருந்தனர். ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் அவர்களை வென்று இந் நாட்டைக் கைக்கொண்டான். அது முதல் இந்த நாடு அவன் பெயரால் தொண்டை நாடு எனப் பட்டது என்பது ஒரு கொள்கை.

 

2. தொண்டை என்பது ஒரு வகைக் கொடி. சோழ அரசனுக்கு நாகர் மகள் ஒருத்தி மனைவி. அவள் ஒரு தீவில் இருந்தாள். அவள் தான் பெற்ற ஆண் குழந்தையைத் தொண்டைக் கொடியால் சுற்றிக் கப்பல் மூலமாகச் சோழனுக்கு அனுப்பினாள். தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட அம் மகன் தொண்டைமான் எனப் பெயர் பெற்றான். அவன் சோழப் பிரதிநிதியாக இருந்து இந்த நாட்டை ஆண்டான். அதனால் இந்த நாடு தொண்டை நாடு எனப்பட்டது என்பது மற்றொரு கொள்கை.

கரிகாலன்

ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட சோழ அரசருள் மிகச் சிறந்தவன் கரிகாலன். இவன் பல நாடுகளை வென்றவன். இவன் குறும்பரை வென்று தொண்டை நாட்டைக் கைப் பற்றிய முதல் சோழன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவன் தொண்டை நாட்டுக் காடுகளை அழித்து நாடாக்கினான்; வேளாண்மையை வளர்ப்பதற்காக நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றினான்.

கரிகாலனுக்குப் பின் அவன் மரபில் வந்த சோழர் சிலர் தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். அப்பொழுது காஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் தலை நகரமாக இருந்தது.

பிறகு இந்த நாடு பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பல்லவர் ஆட்சி ஏறக்குறைய அறுநூறு வருட காலம் இருந்தது.

தொண்டைமண்டல வேளாளர் எனப்படுவோர் தொண்டைமண்டலத்தைத் தோன்றிடமாகக் கொண்ட வேளாளர்கள் ஆவர். தொண்டைமண்டல சைவ வேளாளர், தொண்டைமண்டல துளுவ வேளாளர், கார்கோடக வேளாளர் மற்றும் கொண்டைக்கட்டி ஆகிய நான்கு வேளாள சாதிகளும், ஒன்றாக தொண்டைமண்டல வேளாளர் என அழைக்கப்படுவர். இவர்களுக்கு பொதுவாக தொண்டைமண்டல முதலியார்கள் அல்லது வெள்ளாள முதலியார்கள் என்ற பட்டங்களும் வழங்கப்படுவதுண்டு.

 

தொண்டைமண்டல வேளாளர் சங்கம்

தோற்றம்

திருத்தணியில் சுமார் 1880 முன் நமது வேளாளர் மரபினர்கள் தர்மம் மடம் ஒன்றை தொடங்கி 2.2.1880 மற்றும் 3.2.1880 இல்

வ.எண்

ஊர் பெயர்

தெய்வத்திருவாளர்கள்

1

காஞ்சிபுரம்

அண்ணாமலை முதலியார் மகன் வேதகிரி முதலியார்

2

காஞ்சிபுரம்

முனியப்ப முதலியார் மகன் வெங்கடாசலம் முதலியார்

3

காஞ்சிபுரம்

அய்ய முதலியார் மகன் தாண்டவராய முதலியார்

4

காஞ்சிபுரம்

சதாசிவ முதலியார் மகன் ஆதிமூல முதலியார்

5

காஞ்சிபுரம்

உத்தண்டி முதலியார் மகன் நல்லதம்பி முதலியார்

6

குண்டையார் தண்டலம்

முனியப்ப முதலியார் மகன் கசாலி முதலியார்

7

கணிகிலுப்பை

ஆண்டியப்ப முதலியார் மகன் அய்யாசாமி முதலியார்

8

செய்யனூர்

தாண்டவராய முதலியார் 

9

செய்யனூர்

முத்து முனியப்ப முதலியார்

 ஆகியோர் கொண்ட குழு திருத்தணியில் 30 கெஜம் அகலத்தில் ஒரு மனை வாங்கப்பட்டது.

கிபி 1900-ல் காஞ்சிபுரம் கோட்ராம்பாளையத்தில் வாழ்ந்த தெய்வத்திரு P.A. ராமலிங்க முதலியார் அவர்கள் தலைமையில் வேளாள மரபினர்கள் உதவியோடு பெரும் பொருட்செலவில் மனையின் 4 எல்லைகள் உறுதிப்படுத்தி மேம்படுத்தப்பட்டது.

 

19.3.1960ல் தெய்வத்திரு P.V. நடேச முதலியார் பில்லாந்தாங்கல் அவர்கள் தலைமையில் தர்ம மடம் என்பதை தொண்டை மண்டல வேளாளர் சங்கம் என பெயர் மாற்றி செயல்பட துவங்கியது. பின்னர் திருமண கூடம் ஒன்று வேளாள மரபினர் நன்கொடை மூலம் கட்டி முடிக்கப்பட்டு 13.6.1966 கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது. 1960 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் நம் இன மக்களின் நன்கொடை மூலம் 18 அறைகள் கட்டப்பட்டது. 1987ல் திருமண மண்டபத்திற்கு என சமையற்கட்டு கட்டிடம் கட்டப்பட்டு 2.8.1987 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திரு  P.A. R. ஈஸ்வர வடிவேல் முதலியார் தலைமையில் 20.4.2001ல் சங்கம் முறைப்படி காஞ்சிபுரம் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு எண் 70 /2001ல் பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து சங்கம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தெய்வத்திரு N. ரங்கநாத முதலியார் அவர்கள் தலைமையில் 3.11.2010 ல் பாலாற்றங்கரையில் உள்ள புஞ்சையரசன்தாங்கல் கிராமத்தில் கிழக்கு மேற்கு 32 அடியும் வடக்கு தெற்கு 141 அடியும் மொத்தமாக 4813 சதுர அடி அளவுள்ள காலி மனை வாங்கப் பெற்றது. மேலும் 2013ல் மூன்று கடைகள்  திருத்தணியில் கட்டிமுடிக்கப்பட்டு பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் 2014-15 ல் திருமண மண்டபத்தின் தரைதளம் மற்றும் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ணம்பூச்சும் செய்யப்பட்டது.

2018-19 ல் தெய்வத்திரு பி ஏ ஆர் சுந்தரவடிவேல் முதலில் அவர்கள் தலைமையில் உணவுக்கூடம் மற்றும் 5 அறைகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததை அப்புறப்படுத்தி புதிதாக உணவுக் கூடம் மற்றும் 5 அறைகள், குளியலறை மற்றும் கழிப்பறை புதுப்பிக்கப்பட்டது.

நீண்டகால தேவையான தண்ணீர் வசதிக்காக ஆழ்குழாய் கிணறு ஒன்று  திரு ஆர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் 30.6.2021 அன்று அமைக்கப்பட்டு நீராதாரம் உறுதிசெய்யப்பட்டது

நோக்கங்கள்

1.    இச்சங்கம் முற்றிலும் தொண்டை மண்டல வேளாளர் சமுதாய நல சேவையை அடிப்படை நோக்கமாகக் கொண்டது.

2.    இச்சங்கம் தொண்டை மண்டல வேளாளர் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு இவை தன்னிறைவு அடைய மிகவும் பாடுபடும்.

3.    இச்சங்கம் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இவர்களின் நலன்களை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

4.    இச்சங்கம் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், அறிவொளி இயக்கங்கள் இவைகள் இப்பகுதியில் அமைய முழுமையாக பாடுபடும்.

5.    இச்சங்கம் இப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும். ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் வகிக்கும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும்.

6.    இச்சங்கம் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், இலவச மருத்துவ முகாம்கள் அமைத்தும் மக்களுக்கு தன் சேவையை கிடைக்கச்செய்யும்.

7.    சங்கத்திற்கு பூர்வீக சொந்தமான சத்திரத்தில் திருமணங்கள் நடைபெற இடவசதி அளித்து உதவி செய்யும்.

8.    இச்சங்கம் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க பாடுபடும் உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் மேம்பாடு அடைய உதவிகள் செய்யும்.

9.    இச்சங்கம் தனது நிதியிலிருந்து அசையா சொத்துக்கள் சங்கத்தின் பெயரில் வாங்கி அதில் மருத்துவமனை, நூல்நிலையம் மற்றும் முதியோர் காப்பகம் அமைத்து சமுதாயத்திற்கு சிறந்த தொண்டு செய்யும்.

10.        இச்சங்கம் சமூகத்தில் எழுத்தறிவு, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், தேச ஒற்றுமை இவைகள் அமைய பாடுபடும்.

11.        இச்சங்கம் அரசின் கொள்கைக்கு முரண்படாது தன் சேவையை மக்களுக்கு கிடைக்க மிகவும் பாடுபடும்.

12.        பெரிய காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் மாலைச்சந்தி சாயரட்சை பூஜை 6 மணிக்கு நம்மவர்கள் மட்டும் நபர் ஒன்று வீதம் தினசரி பூஜை 365 நாட்கள் செய்தல்.

13.        சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ சுவாமி ரதோத்சவம் செய்தல் அன்று அன்னதானம் செய்தல்.

14.        ஒவ்வொரு ஆண்டு பொதுக்குழுவில் அன்னதானம் செய்தல்.

 

செயல்பாடுகள்

1.       காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மாலை சந்தி பூஜை சாயரட்சை தினசரி மாலை 5: 30 நிமிடம் முதல் மாலை 6.:30 மணி வரை நடத்தப்படுகிறது. நம் இன மக்களின் ஆதரவோடு 365 நாட்களுக்கும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. நம்மவர்கள் பிறந்தநாள், திருமணநாள் மற்றும்  முக்கிய நாட்களில் உபயதாரர் பெயரில் அபிஷேகம் செய்யப்பட்டு கௌரவிக்கப் படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 5000/- செலுத்தி பூஜையில் பங்கு பெறலாம். இப்பணி கலச செம்மல் தெய்வத்திரு நடேச வேதகிரி முதலியார் முயற்சியால் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2.       அருள்மிகு காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவத்தில் நமது சங்கம் உபயம் ஏற்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் நம் இன மக்களின் ஆதரவோடு நன்கொடை பெறப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் பக்தர்களுக்கு நம் சங்கத்தின் சார்பாக அன்னதானம் செய்யப்படுகிறது.

3.       நம் இன மக்களின் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகாலமாக பரிசு தொகை அளித்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.  இதில் காஞ்சிபுரம் சத்தி & கோ உரிமையாளர்    தெய்வத்திரு தேவராஜன் முதலியார் மகன் திரு பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பரிசு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள்.

4.       நமது சங்கத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளை மாதமிருமுறை மருத்துவர் கு. பா. ரவீந்திரன் அவர்கள் நடத்தி வரும் முதல் குரல் பத்திரிகையில் தகவல் வெளியிடப்படுகிறது. அனைத்து நிகழ்வுகளிலும் மருத்துவர் கு. பா. ரவீந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

 

மனதில் நிற்கும் கடந்தகால நன்கொடையாளர்கள் திருவாளர்கள்

வ.எண்

ஊர் பெயர்

தெய்வத்திருவாளர்கள்

1

காஞ்சிபுரம்

P. A.  ராமலிங்க முதலியார்

2

துறையூர்

. மு. கோவிந்தராஜ முதலியார்

3

சென்னை

S. ஜெகநாதன் முதலியார்

4

நாட்டேரி

கா. கி. மாணிக்க முதலியார்

5

அரிகில்பாடி

P. பி பாலகிருஷ்ண முதலியார் - சொக்கம்மாள்

6

பெரிய காஞ்சிபுரம்

கணபதி முதலியார் - எல்லாம்மாள்

7

திப்பசமுத்திரம்-வேலூர்

. கு. உமாமகேஸ்வரன் முதலியார்

8

கதிர்பூர்

தி. மாணிக்க முதலியார்

9

செய்யனூர்

முத்து முனியப்ப முதலியார்

10

பெரிய காஞ்சிபுரம்

. . சுந்தர முதலியார்

11

சின்ன காஞ்சிபுரம்

N. கன்னியம்மாள்

12

கதிர்பூர்

பெ. முருகேச முதலியார்

13

கதிர்பூர்

. தணிகாசல முதலியார்

14

வெங்களத்தூர்

செ. . அய்யாசாமி முதலியார்

15

வெங்களத்தூர்

செ.. கிஷ்டப்ப முதலியார்

16

பெரிய காஞ்சிபுரம்

K. நாராயணசாமி முதலியார்

17

 காஞ்சிபுரம்

வடிவேல் முதலியார்

18

சின்ன காஞ்சிபுரம்

C. பரமசிவம் முதலியார்

19

அழிஞ்சிகுப்பம்

A. T. கோபால் முதலியார்

20

அழிஞ்சிகுப்பம்

A. T.  கிருஷ்ணசாமி முதலியார்

21

துறையூர்

K.N. அண்ணாமலை முதலியார் - பார்வதி அம்மாள்

22

சின்ன காஞ்சிபுரம்

P. வரதராஜா முதலியார்

 

கடந்தகால நிர்வாகிகள்

தலைவர் பொறுப்பு வகித்தவர்கள்

1.       தெய்வத்திரு P. A.  ராமலிங்க முதலியார்  - காஞ்சிபுரம்

2.       தெய்வத்திரு நடேச முதலியார் ஜவுளிக்கடை - காஞ்சிபுரம்

3.       தெய்வத்திரு P.V.  நடேச முதலியார் முதலியார் பில்லாந்தாங்கள்

4.       நலமுடன்திரு. P. A. R. ஈஸ்வர வடிவேல் முதலியார் காஞ்சிபுரம்

5.       தெய்வத்திரு N. ரங்கநாத முதலியார் - காஞ்சிபுரம்

6.       தெய்வத்திரு P. A. R.  சுந்தர வடிவேல் முதலியார் காஞ்சிபுரம்

 

செயலாளர் பொறுப்பு வகித்தவர்கள்

1.       தெய்வத்திரு M. சுப்பிரமணிய முதலியார் (ஓழையாத்தூர்) காஞ்சிபுரம்

2.       நலமுடன்திரு. குணசேகரன் முதலியார் (ஆண்டிபாளையம்) - காஞ்சிபுரம்

3.       நலமுடன்திரு. குருநாத முதலியார் மேலாளர் ஓய்வு இந்தியன் வங்கி - காஞ்சிபுரம்

பொருளாளர் பொறுப்பு வகித்தவர்கள்

1.       தெய்வத்திரு தேவராஜன் முதலியார், சத்தி & கோ காஞ்சிபுரம்

2.       நலமுடன்திரு அண்ணாமலை முதலியார் காளிகாம்பாள் சில்க்ஸ்காஞ்சிபுரம்

3.       நலமுடன்திரு தங்கவேலு முதலியார் தலைமை ஆசிரியர் ஓய்வு - காஞ்சிபுரம்

4.       நலமுடன்திரு E. சௌந்தரராஜன் முதலியார் - காஞ்சிபுரம்

 

தற்போதைய நிர்வாகிகள்

தலைவர் - 15.7.2020 முதல் 

R. கார்த்திகேயன் முதலியார், AMIE, MBA,

Executive Engineer (ஓய்வு) / TNEB

(திருப்பனங்காடு) குரோம்பேட்டை - சென்னை - 44

 

                         

செயலாளர் – 2013 முதல்

பொன். சீனிவாசன் முதலியார்

கந்தன் அரிசி ஆலை  - காஞ்சிபுரம்

பொருளாளர் - 07.02.2021 முதல்

Rtn. PP. PHF. A. ஜானகிராமன் முதலியார்

கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு), நாட்டேரி, செய்யார்

 

மேலும் வளரும்…..